×

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் ரூ.21,000 கோடி அபராதம் வசூல்: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததை காரணம் காட்டி பயனாளிகளிடம் ரூ.21 ஆயிரம் கோடி வசூலித்தது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு இது தொடர்பாக அளித்த பதில் வருமாறு: வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் பயனாளிகளிடம் பொதுத்துறை வங்கிகள், முக்கிய தனியார் வங்கிகள் ரூ.21,000 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்துள்ளன. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதது, கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் ஆகியவற்றின் காரணமாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 பெரிய தனியார் துறை வங்கிகள் 2018 முதல் ரூ.35,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, இன்டஸ்லேன்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை பொதுமக்களிடம் இந்த கட்டணத்தை வசூலித்துள்ளன என்று நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ெதரிவித்து உள்ளார். இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் ரூ.21,000 கோடியும், எஸ்எம்எஸ் சேவைக்கு ரூ.8,000 கோடியும், கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனை செய்ய ரூ.6,000 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டது. பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2,000-ரூ.5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ.500-ரூ.1,000 வரையிலும் வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காததால் ரூ.400 முதல் ரூ.500 வரையிலான கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

The post வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் ரூ.21,000 கோடி அபராதம் வசூல்: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Information ,New Delhi ,Government ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...